பதிவு செய்த நாள்
06
பிப்
2016
12:02
திருத்தணி:ஷீரடி சாய்பாபா கோவிலில், நேற்று நடந்த ஆண்டு விழாவில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.திருத்தணி அடுத்த, கே.ஜி.கண்டிகையில் உள்ள, ஷீரடி சாய்பாபா கோவிலில் நேற்று, 13ம் ஆண்டு விழா நடந்தது. நேற்று அதிகாலை 5:00 மணிக்கு, ருத்ர ஹோமம் நடந்தது. காலை 8:00 மணிக்கு, கணபதி மற்றும் சாயிநாத பரிவார மூர்த்திகள் சன்னிதிகளில், சிறப்பு அபிஷேகம், பூஜை மற்றும் தீபாராதனைகள் நடந்தன. மதியம் 2:00 மணி முதல், மாலை 5:00 மணி வரை ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. இரவு 7:30 மணிக்கு, உற்சவர் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், திருத்தணி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து, ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.