ரத்தினத்தால் ஆன சிவலிங்கத்தைப் பூஜை செய்து வழிபட்டால் லட்சுமி கடாட்சம் கிட்டும். செல்வம் பெருகும். உலோகத்தால் ஆன சிவலிங்கத்தை வழிபட்டால் துன்பம் நீங்கும். எதிர்ப்புகள் அகலும். பவள லிங்கத்தை வழிபட்டால் நோய் தீரும். நட்பு பெருகும். கல்லினால் ஆன லிங்கத்தை வழிபட்டால் ஆற்றல் கூடும். கல்வி கலைகளில் தேர்ச்சி கிட்டும். அரும்பெரும் சக்தி உண்டாகும்.