Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கவுதமேஸ்வரர் கோயில், கும்பகோணம் நாகேஸ்வர சுவாமி கோயில், கும்பகோணம் நாகேஸ்வர சுவாமி கோயில், கும்பகோணம்
முதல் பக்கம் » கும்பகோணம் மகா மகபெருவிழா - 2016 » 12 சிவாலயங்கள்
ஏகாம்பரேஸ்வரர் கோயில், கும்பகோணம்
எழுத்தின் அளவு:
ஏகாம்பரேஸ்வரர் கோயில், கும்பகோணம்

பதிவு செய்த நாள்

11 பிப்
2016
04:02

காளிதேவியின் சன்னதி முன்பு சிம்ம வாகனமே இருக்கும். ஆனால், கும்பகோணம் மகாமக கோயில்களில் ஒன்றான ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் அன்னை காளிகாபரமேஸ்வரி நந்தி வாகனத்துடன் காட்சி தருகிறாள். சிவசக்திசொரூபமாக அம்பாள் காட்சி தருவதால் இத்தலத்தில் நந்தி வாகனமாக இருப்பதாக ஐதீகம். இந்த கோயிலிலிருந்து அம்பாள் மட்டுமே மகாமக குளத்திற்கு செல்வாள் என்பது குறிப்பிடத்தக்க அம்சம்.

தல வரலாறு: விஸ்வகர்ம சமுதாய மக்களால் இக்கோயில் உருவாக்கப்பட்டதாக கருதப்படுகிறது. ஸ்தபதிகளின் குலதெய்வம் காமாட்சி. அவர்கள் ஒரு கோயில்கட்டுமான பணியை ஆரம்பிக்கும்போது காளி படத்தை வரைந்தேஆரம்பிப்பார்கள். அனேகமாக கும்பகோணத்தில் உள்ள கோயில்களை கட்ட துவங்கும்போது காளியை பிரதிஷ்டை செய்துவிட்டு இப்பணியை தொடங்கியிருக்கலாம் என தெரிகிறது. இந்தக்கோயிலில் ஏகாம்பரேஸ்வரரையும் தங்கள் குலதெய்வமான காமாட்சியையும் பிரதிஷ்டைசெய்தனர். இங்கு ஏகாம்பரேஸ்வரரைவிட காமாட்சிக்கே அதிக மரியாதை. எனவே காமாட்சி மட்டுமே இங்கிருந்து மகாமக குளத்திற்கு எழுந்தருள்வாள்.

சிறப்பம்சம்: சிவன் கோயிலாக இருந்தாலும் இங்கிருக்கும் காளிகா பரமேஸ்வரி சன்னதியிலேயே கூட்டம் அலைமோதுகிறது. ராஜகணபதியை வணங்கிவிட்டு ராகு காலத்தில் காளிகா பரமேஸ்வரிக்கு பூஜை செய்ய வேண்டும். ராகுகால பூஜை முதன்முதலாக ஆரம்பிக்கப்பெற்ற பெருமை இந்த கோயிலைத்தான் சாரும். தினமும் ராகுகால பூஜை நடப்பது விசேஷ அம்சம். கன்னிப்பெண்கள் கன்னிகா பரமேஸ்வரியை வேண்டிக்கொண்டால் நல்ல வரன் அமையும். அசுரனை வதம் செய்யும் கோலத்தில் எட்டு கரங்களுடன் அஷ்டபுஜ காளியாக கன்னிகாபரமேஸ்வரி வீற்றிருக்கிறாள். கத்தி, கேடயம் ஆகியவை கைகளில் உள்ளன.  காளிகா பரமேஸ்வரியின் சன்னதி முன்பு அஷ்டலட்சுமி மண்டபம் இருக்கிறது. இந்த மண்டபத்தில் அம்பிகையின் முன்னிலையில் சிம்மத்திற்கு பதிலாக நந்தி இருக்கிறது. அம்பாள் ருத்திராம்சம் பொருந்தியவள் என்பதால் நந்தி சிலை அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. விஸ்வகர்ம சமுதாய மக்களின்பராமரிப்பில் இக்கோயில் இருக்கிறது.

திருவிழா: புரட்டாசி மாதம் பூர நட்சத்திரத்தில் சுமங்கலிஆராதனை நடக்கிறது. சுமங்கலிகள் இந்நாளில் வழிபட்டு மாங்கல்ய பலம் பெறலாம். ஆடி கடைசி வெள்ளியன்று திருவிளக்கு பூஜை சிறப்பாக நடத்தப்படும். மகாமகத்தன்று காமாட்சி அம்பிகை மட்டும் இங்கிருந்து மகாமக குளத்திற்கு எழுந்தருள்வாள்.

இருப்பிடம்: கும்பகோணம் நாகேஸ்வரம் கீழவீதியில் ஏகாம்பரேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது.

 
மேலும் கும்பகோணம் மகா மகபெருவிழா - 2016 12 சிவாலயங்கள் »
temple news
மகாமகத்தன்று மகாமக குளக்கரைக்கு கும்பகோணத்திலுள்ள 12 சிவன் கோவில்களில் இருந்து சுவாமிகள் ... மேலும்
 
temple news
சில பெண்கள் வயது அதிகமாக இருந்தும் ருதுவாகாத நிலைமை ஏற்படும். சிலருக்கு எவ்வளவோ வைத்தியம் செய்தும் ... மேலும்
 
temple news
கும்பகோணம் மகாமகத்தின்போது குளக்கரையில் காட்சிதரும் 12 தெய்வங்களுள் ஒருவர் அபிமுகேஸ்வரர். இவர் ... மேலும்
 
temple news
உலகிலேயே மிகப்பெரிய பாவம் பசுவைக் கொல்வதுதான். அறிந்தோ, அறியாமலோ பசுவுக்கு தீங்கிழைத்திருந்தால் ... மேலும்
 
temple news
ஜலதோஷம், ஆஸ்துமா, இருமல், காய்ச்சல் போன்றவற்றால் அடிக்கடி சிரமப்பட்டு மருத்துவச்செலவை தவிர்க்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar