Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சோமேஸ்வரர் கோயில், கும்பகோணம் கோடீஸ்வரர் கோயில், கும்பகோணம் கோடீஸ்வரர் கோயில், கும்பகோணம்
முதல் பக்கம் » கும்பகோணம் மகா மகபெருவிழா - 2016 » 12 சிவாலயங்கள்
ஆதிகம்பட்டவிஸ்வநாதர் கோயில், கும்பகோணம்
எழுத்தின் அளவு:
ஆதிகம்பட்டவிஸ்வநாதர் கோயில், கும்பகோணம்

பதிவு செய்த நாள்

11 பிப்
2016
05:02

ஆசிரியர்களுக்கு மாணவர்கள் தகுந்த மரியாதையை தரவேண்டும் என்பதை உணர்த்தும் வகையிலான கோயில் கும்பகோணத்தில் இருக்கிறது. இதுவே ஆதிகம்பட்ட விஸ்வநாதர் கோயிலாகும். மாணவர்கள் மட்டுமின்றி, தங்க நகை தொழில் செய்பவர்களும் இவரை வணங்கி தொழில் மேன்மை பெறலாம். ஒரு காலத்தில் தங்க நாணயங்கள் அச்சிடும் இடமாக இத்தலம் விளங்கியது.

தல வரலாறு: கும்பகோணம் ஒரு காலத்தில் மாலதிவனமாக இருந்தது. மாலதி என வழங்கப்படும் மரங்கள் அடர்ந்திருந்தன. உதயகிரியில் நிசாசரா என்ற தபஸ்வி வசித்தார். அவரது மகனான துõமகேது மிகப்பெரிய ஆசிரியர். பல கலைகளை கற்றவர். இவரிடம் பாடம் படிக்க வேண்டுமானால் மாணவர்கள் போட்டி போட்டு செல்வார்கள். தற்போது சிறந்த கல்லுõரிகளை தேர்ந்தெடுத்து மாணவர்கள் படிக்க செல்வதுபோல, அனைத்தும் அறிந்தவர் என்பதால் துõமகேதுவை சுற்றி மாணவர் கூட்டம் மொய்த்துக் கொண்டே இருக்கும். அவர் என்ன சொன்னாலும் மாணவர்கள் அப்படியே கேட்பார்கள். இதன் காரணமாக படிப்பில் கவனம் அதிகமாகி கலைகளில் சிறந்து விளங்கினார்கள். மிகச்சிறப்பாக படிக்கும் மாணவர்களை துõமகேது சுற்றுலா அழைத்துச்செல்வார். சிவாலயங்களுக்கு செல்வது அவரது வழக்கம். அக்கோயிலின் அமைப்பு, தல வரலாறு, சிவ வழிபாட்டின் மகிமை ஆகியவற்றை செய்முறை விளக்கங்களுடன் கற்றுக்கொடுப்பது வாடிக்கையாக இருந்தது. அவ்வாறு அவர் வந்த தலங்களில் ஒன்றே ஆதிகம்பட்ட விஸ்வநாத கோயிலாகும். இவரது ஆசிரிய பணியை மெச்சி இறைவனே அவருக்கு காட்சி கொடுத்தார். ஆனந்தமயமான அந்த காட்சியைக்கண்ட துõமகேது இறைவனுக்கு விசுவேசர் என்றும், அம்பாளுக்கு ஆனந்தநிதி என்றும் பெயர்சூட்டினார். அவ்விடத்தில் இருந்த தீர்த்தத்திற்கு துõமகேது தீர்த்தம் என்று இறைவன் பெயர்சூட்டினார்.

சிறப்பம்சம்: கம்பட்டம் என்ற சொல்லுக்கு தங்கச்சாலை என்று பொருள். ஒரு காலத்தில் இந்த இடத்தில்தான் பொற்காசு அடிக்கும் நிலையங்கள் இருந்தன. தஞ்சையையும் பழையாரையும் தலைநகரங்களாக கொண்டு ஆண்டுவந்த சோழ மன்னர்கள் இந்த இடத்தில்தான் நாணயம் தயாரிக்கும் நிலையங்களை அமைத்தனர். தங்க காசுகள் இங்கு உருவாக்கப்பட்டன. இவ்வகையில் இதனை தமிழகத்தின் நாசிக் என்றுகூட செல்லப்பெயரிட்டுஅழைக்கிறார்கள்.

விழாக்கள்: மகாமக தினத்தன்று ஆதிகம்பட்ட விஸ்வநாதர் அம்பாளுடன் மகாமக குளத்திற்கு எழுந்தருள்கிறார். இதுதவிர, சிவனுக்குரிய அத்தனை விழாக்களும் இங்கு நடத்தப்படும்.

இருப்பிடம்: ராஜகோபுரத்துடன் கூடிய இந்த தலம் கும்பகோணம் கம்பட்ட விஸ்வநாத கீழவீதியில் உள்ளது.

தொடர்புடைய கோயில்கள் :
 
மேலும் கும்பகோணம் மகா மகபெருவிழா - 2016 12 சிவாலயங்கள் »
temple news
மகாமகத்தன்று மகாமக குளக்கரைக்கு கும்பகோணத்திலுள்ள 12 சிவன் கோவில்களில் இருந்து சுவாமிகள் ... மேலும்
 
temple news
சில பெண்கள் வயது அதிகமாக இருந்தும் ருதுவாகாத நிலைமை ஏற்படும். சிலருக்கு எவ்வளவோ வைத்தியம் செய்தும் ... மேலும்
 
temple news
கும்பகோணம் மகாமகத்தின்போது குளக்கரையில் காட்சிதரும் 12 தெய்வங்களுள் ஒருவர் அபிமுகேஸ்வரர். இவர் ... மேலும்
 
temple news
உலகிலேயே மிகப்பெரிய பாவம் பசுவைக் கொல்வதுதான். அறிந்தோ, அறியாமலோ பசுவுக்கு தீங்கிழைத்திருந்தால் ... மேலும்
 
temple news
காளிதேவியின் சன்னதி முன்பு சிம்ம வாகனமே இருக்கும். ஆனால், கும்பகோணம் மகாமக கோயில்களில் ஒன்றான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar