சூலம் ரூபத்தில் நடந்த தி.மலை அண்ணாமலையார் தீர்த்தவாரி !
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24பிப் 2016 12:02
திருவண்ணாமலை: மாசி மகத்தையொட்டி கடந்த 22ம் தேதி, திருவண்ணாமலை அடுத்த பள்ளிகொண்டாப்பட்டு கிராமத்தில் உள்ள கவுதம் நதிக்கரையில் பலத்த பாதுகாப்புடன் அண்ணாமலையாருக்கு “சூலம் ரூபத்தில்” தீர்த்தவாரி நடந்தது. உண்ணாமுலையம்மன் சமேதரராய் அண்ணாமலையார் தீர்த்தவாரி மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் ஸ்வாமி தரிசனம் செய்தனர். நதிக்கரையில் பலத்த பாதுகாப்புடன் தடுப்புகள் அமைக்கப்பட்ட பகுதிகளில் மட்டுமே பக்தர்களை போலீஸார் அனுமதித்தனர். இதில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து ஏராளமான பக்தர்கள் புனிதநீராடினர்.