சாக்கிய நாயனார் காட்டில் கண்ட சிவலிங்கத்தை வழிபட விரும்பினார். மலர்கள் ஏதும் கிடைக்கவில்லை. அங்கு கிடைத்த சிறுகற்களை மலர்களாகக் கருதி லிங்கத்தின் மீது மெதுவாக எறிந்து வழிபட்டார். அதையும் தனக்கு செய்த பூஜையாக கருதிய சிவன் அவருக்கு காட்சியளித்து அருள்புரிந்தார். உள்ளத்தில் உண்மையான அன்பு இருந்தால் இறையருளைப் பெறலாம் என்பதை நாயனார் மூலம் உலகிற்கு சிவன் எடுத்துக் காட்டினார்.