பிரதோஷத்தன்று நீங்கள் சிவன் கோவிலுக்கு செல்கிறீர்கள். அன்று சிவாலயத்தை வலம் வர சில விதிமுறைகள் உண்டு. அந்த விதிமுறை மறக்காமல் இருக்க வேண்டுமா? இதோ எளிய வழி! நீங்கள் பிரதோஷவலம் வர இங்கே தரப்பட்டிருக்கும் படமும் உதவும்.
*நச நகோ நச கோ நச என்ற வார்த்தையை நினைவில் கொள்ளுங்கள். இதில் ந என்பது நந்தியையும், ச என்பது சண்டிகேஸ்வரரையும் கோ என்பது கோமுகியையும் (மூலஸ்தானத்தில் இருந்து அபிஷேக நீர் வெளியாகும் வழி) குறிக்கும். *முதலில் சிவன் சன்னிதி முன்பிருக்கும் நந்தியை வணங்கி அங்கிருந்து இடமாக சண்டிகேஸ்வரர் சன்னிதி சென்று வணங்குங்கள். *மீண்டும் அதே வழியில் திரும்பி நந்தியை வணங்குங்கள். *நந்தியிடமிருந்து வலமாக கோமுகி வரை செல்லுங்கள். கோமுகியிலிருந்து அதே வழியில் திரும்பி நந்தியை தரிசியுங்கள். *நந்தியிடம் இருந்து இடமாகச் சென்று சண்டிகேஸ்வரரை தரிசியுங்கள். *அதே வழியில் திரும்பி கோமுகி வரை செல்லுங்கள். *கோமுகத்திலிருந்து இடமாகச் சென்று நந்தியின் முன் வந்து நின்று இரு கொம்புகளுக்கும் நடுவே தரிசியுங்கள். *நந்தியிடமிருந்து வலமாக சண்டிகேஸ்வரர் சன்னிதி வரை செல்ல வேண்டும்.