பகவத்கீதையில் (16.21) கீதாச்சாரியன் இவ்விதம் கூறுகிறார் - ஆத்மாவை அழிக்கும் நரகத்தின் வாயில்கள் மூன்று அவையாவன ; காமம், கோபம், பேராசை என்பன ஆதலால் இந்த மூன்றையும் விலக்க வேண்டும் . எனக்குக் கோபம் வராமல் இல்லை. என்றாலும் நான் அதை அடக்கிக்கொள்கிறேன். தொடர்ந்து முயற்சி செய்தால் கோபத்தை அடக்கிக் கொள்வது, கட்டுப்படுத்துவது என்பது எல்லோராலும் இயலும் என்கிறார் அண்ணல் காந் தியடிகள்.