மணிமேகலையில் சீத்தலைச் சாத்தனார், கள்ளுண்ணுதல், பொய்மை, காமம், கொலை, உள்ளத்தில் களவு செய்யும் எண்ணம் எழுதல் ஆகிய ஐந்து வகையான குற்றங்களை நீக்குவதே துறவாகும் என்று துறவுக்கு இலக்கணம் கூறியுள்ளார். துறவறம் பற்றித் திருக்குறளில் இடம் பெற்றுள்ள கரு த்துக்களில், துறவிக்கு, உரிய பண்புகள் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன.