சித் என்றால் அறிவு என்று அர்த்தம். மனதை ஒருமுகப்படுத்தியதனால் அறிவு வேண்டியதை அறிந்தவர்கள் சித்தர்கள். அறிய வேண்டிய ஒரே பொருள்பரம்பொருளே ஆகும். சித்தி - நிறைவு, சித்தர்கள் - சான்றோரின் நிறைவு பெற்றவர்கள். எனவே, சித்தி பெற்றவர் என்பதற்குப் பரிபூரணம் எய்தியவர் என்றும் ஒரு பொருள் உண்டு.