பதிவு செய்த நாள்
04
மார்
2016
11:03
அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில், மகா சிவராத்திரி விழா மற்றும் சிறப்பு வழிபாடு, வரும், 7ல் நடக்கிறது. வரும், 7ல் மகா சிவராத்திரி விழா நடைபெறுகிறது. இதையொட்டி, அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில், அன்றிரவு, 8:00 முதல் மறுநாள், அதிகாலை, 6:00 மணி வரை, அவிநாசியப்பருக்கு சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடைபெறுகிறது. இரவு, 8:00, 10:00, நள்ளிரவு, 12:00, அதிகாலை, 4:00 மணி என, ஒவ்வொரு காலத்துக்கும், சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடத்தப்படுகிறது. அன்னதான மண்டபத்தில், சிவனடியார்கள் சிவ பூஜை மேற்கொள்கின்றனர். திருப்பூர் சாய் கிருஷ்ணா நாட்டியாலயா மாணவியரின் பரத நாட்டிய கலை நிகழ்ச்சி நடைபெறுகிறது. பக்தர்கள் வசதிக்காக, சிறப்பு தரிசன ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
பிற கோவில்களில்...
* அவிநாசி, காந்திபுரம் அங்காளம்மன் கோவிலில் நடந்து வரும், 71வது நந்தா தீப குண்டம் திருவிழாவில், வரும், 7ல், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பல்லயம் புறப்பாடு ஆகியன நடைபெறுகின்றன.
* திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவில், பழங்கரை சோளீஸ்வரர் கோவில், நடுவச்சேரி கோதைப்பிராட்டீச்சுரர் கோவில், சேவூர் வாலீஸ்வர சுவாமி கோவில் ஆகியவற்றிலும், மகா சிவாரத்திரியை முன்னிட்டு, சிறப்பு பூஜை, வழிபாடு நடைபெறுகிறது.
* அவிநாசி - சேவூர் ரோடு கொங்கு கலையரங்கில், ஈஷா யோகா மையம் சார்பில், மகா சிவராத்திரி விழா, 7ம் தேதி இரவு, 9:00க்கு துவங்கி, மறுநாள் அதிகாலை வரை, விடிய விடிய நடை பெறுகிறது. விழாவையொட்டி, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.