திருப்பதி வேங்கடவனை வேண்டிக்கொண்டு மாவிளக்கு வழிபாடு செய்வது மிகுந்த பலனைத் தரும். வெங்கடாஜலபதியை மனதில் நினைத்து நமது கோரிக்கையைச் சொல்லி, நம் வீட்டு பூஜையறையில் அவரது படம் வைத்து மாவிளக்கு ஏற்ற வேண்டும். நெய் தீரும் வரை விளக்கை அணைக்கக்கூடாது. தவறுதலாக காற்றில் அணைந்தால் திரும்ப ஏற்ற வேண்டும். விளக்கு முழுமையாக எரிந்து தானாக அணைந்ததும் குழந்தைகளுக்கும் அருகிலுள்ளவர்களுக்கும் அந்த மாவைக் கொடுக்க வேண்டும். இந்த வேண்டுதலை சனிக்கிழமைகளில் அல்லது திருவோண நட்சத்திரத்தில் செய்வது மிக மிகச் சிறப்பு.