ஹயக்ரீவர் அவதாரம் ஆடிப் பவுர்ணமியில்தான் நிகழந்தது. பெருமாள் இருமுறை ஹயக்ரீவராக அவதரித்துள்ளார். ஒருமுறை அசுரர்கள் அனைத்து வேதங்களையும் கவர்ந்து கடலடியில் மறைத்தனர். அதைக் காப்பாற்ற ஹயக்ரீவ அவதாரம் எடுத்தார். ஞானனந்த மயம் தேவம் நிர்மல ஸ்படிகாக்ருதிம் ஆதாரம் சர்வவித்யானாம் ஹயக்ரீவம் உபாஸ்மஹே என்ற ஹயக்ரீவ ஸ்லோகத்தை உருக்கமுடன் பாடி வழிபட்ட நிகமாந்த தேசிகருக்கு. அவரின் ஸ்லோக உபாசனையில் மகழ்ந்த ஹயக்ரீவர் திருவஹிந்திரபுர மலையில் காட்சி கொடுத்தார். இங்குள்ள கல்விக்கடவுளான ஹயக்ரீவரை மாணவர்கள் கல்வி உபகரணங்களை வைத்து (புத்தகம், நோட்டு, எழுதுகோல்) ஏலக்காய் மாலையிட்டு, பானகம் வைத்து பூஜை செய்தால், ஞானமும் கல்வியும் அளவின்றிக் கிடைக்கும். வேகவைத்த கடலைப் பருப்புடன் வெல்லம், தேங்காய் கலந்து செய்வது ஹயக்ரீவ பிண்டி. இதுவே இவருக்குப் பிடித்த பிரசாதம், ஹயக்ரீவர் குதிரை முகம் கொண்டவர். இவர் அவதாரம் தசாவதாரத்தில் அடங்காது. தசாவதாரம் பூமியில் உண்டானது; ஹயக்ரீவ அவதாரம் விண்ணுலகில் ஏற்பட்டது.