பதிவு செய்த நாள்
09
மார்
2016
03:03
எடுத்த செயலை முடித்தே தீரும் ரிஷப ராசி அன்பர்களே!
சூரியன் மாதம் முழுமையும். புதன் மார்ச் 30 வரையும், சுக்கிரன் ஏப். 1க்கு பிறகும் நன்மை செய்வர். மற்ற கிரகங்கள் சாதகமற்ற இடத்தில் இருந்தாலும் பாதகமில்லை. எந்த செயலையும் முயற்சி எடுத்தே நிறைவேற்ற வேண்டியிருக்கும். ஆனால் முயற்சிக்கு தகுந்த பலன்கள் கிடைத்தே தீரும். சூரியனால் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். பிறர் கண்படும் அளவுக்கு பணப்புழக்கம் உயரும். வீண்விவாதங்களில் ஈடுபட வேண்டாம். குடும்பத்தில் முன்னேற்றமான சம்பவங்கள் நடக்கும். வீட்டிற்கு தேவையான வசதி கிடைக்கும். கணவன்- மனைவி விட்டுக் கொடுத்துப் போகவும்.
தொழில், வியாபாரம் சிறப்பாக நடக்கும். அரசிடம் எதிர்பார்த்த சலுகை மற்றும் வங்கிக்கடன் கிடைக்கும். புதனால் மார்ச் 30 வரை பொருளாதார வளம் மேம்படும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். எடுத்த செயல்கள் வெற்றி அடையும். மார்ச் 25,26,27ல் எதிர்பாராத வகையில் பணம் கிடைக்கும். மாத பிற்பகுதியில் போட்டி அதிகரிக்கும்.
பணியாளர்களின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேறும். மேல் அதிகாரிகளின் ஆதரவும், சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் இருக்கும். மாத பிற்பகுதியில் வேலைப்பளு அதிகரிக்கும். ஆனால் அதற்கான பலன் கிடைத்து விடும்.
கலைஞர்களுக்கு போட்டி குறையும்.
அரசியல்வாதிகள் தலைமையிடம் நல்ல பெயர் பெறுவர்.
மாணவர்களுக்கு ஆசிரியர்களிடம் நற்பெயர் கிடைக்கும். போட்டி பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். மாத பிற்பகுதியில் சிரத்தை எடுத்து படித்தால் தான் பலன் கிடைக்கும்.
விவசாயிகளுக்கு பழம், காய்கறி, கீரை வகைகள் நல்ல மகசூல் தரும். கால்நடை மூலம் பணப்புழக்கம் இருக்கும். வழக்கு, விவகாரங்களில் மெத்தனமாக இருக்க வேண்டாம்.
பெண்கள் கணவரின் அன்பு கிடைக்க பெறுவர். மார்ச் 18,19,20ல் புத்தாடை, நகை வாங்கலாம். மார்ச் 28,29, ஏப்.1க்கு பிறகு கை நிறைய பணம் வரும்.விருந்து விழா என சென்று வருவீர்கள்.
நல்ல நாள்: மார்ச் 14,15,18,19,20,25,26,27,28,29, ஏப். 4,5,6,7,10,11.
கவன நாள்: மார்ச் 30,31, ஏப். 1 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 1,9
நிறம்: செந்துõரம், பச்சை.
பரிகாரம்: வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கும், சனிக்கிழமை சனிபகவானுக்கும் அர்ச்சனை செய்யுங்கள். ஏழைகளுக்கு இயன்ற தானம் செய்யுங்கள். செவ்வாய்க்கிழமை அம்மனுக்கு பட்டு சாத்தி அல்லது பால்பாயாசம் படைத்து வணங்க வேண்டும்.