கன்னி: (உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2) மனம் வையுங்க! வானம் வசப்படும்!
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09மார் 2016 03:03
பெற்றோர் மீது பாசம் மிக்க கன்னி ராசி அன்பர்களே!
மாத பிற்பகுதியில் நன்மை அதிகரிக்கும். புதன் மார்ச் 30 க்கு பிறகு நற்பலன் கொடுப்பார். கேது, சனி, செவ்வாயால் நன்மை தொடரும். விடாமுயற்சியால் முடியாததையும் வெற்றிகரமாக முடித்து விடுவீர்கள். பொருளாதார வளம் சிறக்கும். சூரியன் சாதகமற்று இருப்பதால் வீண் விவாதத்தில் ஈடுபட வேண்டாம். குடும்பத்தில் இருந்த பிரச்னை மார்ச் 30க்கு பிறகு மறையும். கணவன் மனைவி இடையே அன்பு மேலோங்கும். ஆடை, அணிகலன் வாங்கலாம். பிள்ளைகளால் மகிழ்ச்சி கிடைக்கும். வீட்டுக்கு தேவையான அனைத்து வசதியும் கிடைக்கப் பெறுவீர்கள். மார்ச் 23,24ல் பெண்களால் நன்மை கிடைக்கும். மார்ச் 18,19,20 ல் உறவினர் வருகையால் நன்மை உண்டாகும். புண்ணிய தலங்களுக்கு சென்று வரும் வாய்ப்பு கிடைக்கும்.
தொழில், வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றம் உண்டாகும். பகைவர்களை வெற்றி கொள்வீர்கள். புதிய தொழில் முயற்சி சிறப்பாக நடந்தேறும். ஏப்ரல் 4,5ல் எதிர்பாராத வகையில் பணவரவு இருக்கும்.
பணியாளர்கள் சிறப்பான முன்னேற்றத்தைக் காணலாம். மார்ச் 30 க்கு பிறகு நன்மை மேலோங்கும். கோரிக்கைகள் எளிதில் நிறைவேறும். சிலர் பதவி உயர்வு காண்பர். சக பெண் ஊழியர்கள் ஆதரவுடன் இருப்பர். மார்ச் 16,17 ஏப்ரல்12,13ல் எதிர்பாராத நன்மை உண்டாகும்.
கலைஞர்கள் சிரத்தை எடுத்தே முன்னேற வேண்டியதிருக்கும். முயற்சியில் இருந்த தடை ஏப். 1 க்கு பிறகு மறையும்.
அரசியல்வாதிகள் மேம்பாடு காண்பர்.
மாணவர்கள் மார்ச் 30 க்கு பிறகு சிறப்பான முன்னேற்றம் காண்பர். மனம் வைத்தால் வானமும் வசப்படும் அளவு போட்டிகளில் வெற்றி காண்பீர்கள்.
விவசாயிகளுக்கு நல்ல மகசூல் கிடைக்கும். நெல், கோதுமை, பழவகைகள், காய்கறிகள், கீரை வகைகள் மூலம் வருமானம் கிடைக்கும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் கைகூடும். கைவிட்டு போன பொருள் மீண்டும் கிடைக்கும்.
பெண்கள் மார்ச் 30க்கு பிறகு குடும்பத்தாரின் அன்பை பெறுவர். ஏப். 6,7ல் விருந்து,விழா என சென்று வருவீர்கள். அக்கம்பக்கத்தினரின் மத்தியில் செல்வாக்குடன் திகழ்வீர்கள்.
நல்ல நாள்: மார்ச் 16,17,18,19,20,23,24,28,29, ஏப். 4,5,6,7,12,13
கவன நாள்: ஏப். 8,9 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 7,9
நிறம்: சிவப்பு, பச்சை
பரிகாரம்: வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தியை வணங்குங்கள். காலையில் சூரியனை வழிபடவும். வெள்ளிக்கிழமைகளில் அம்பாளுக்கு பால் பாயாசம் படைத்து குழந்தைகளுக்கு கொடுங்கள். ஏழைகளின் கல்விக்கு உதவுங்கள்.
பகிர்கcopied
மேலும்
ஐப்பசி ராசி பலன் (18.10.2026 - 16.11.2026 ) »