பதிவு செய்த நாள்
09
மார்
2016
04:03
நல்லதை மனம் திறந்து பாராட்டும் விருச்சிக ராசி அன்பர்களே!
சில கிரகங்கள் சாதகமற்ற இடத்தில் இருந்தாலும், மார்ச் 30ல் புதன் சாதகமான இடத்திற்கு வருவதாலும், சுக்கிரனாலும் நன்மைகள் தொடரும். பொதுவாக சிந்தித்து நிதானத்துடன் செயல்படவும். தடைகளை சந்தித்தே எந்த செயலையும் நிறைவேற்ற முடியும் என்றாலும் அவற்றை படிக்கட்டாக மாற்றி பொருளாதார வளத்தை பெருக்குவீர்கள். பெண்கள் வகையில் இருந்த இடையூறு மறையும். உறவினர்களிடம் சுமூக நிலை ஏற்படும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். பெரியோர்களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். குழந்தை பாக்கியம் உண்டு. புனித ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். எடுத்த செயல் வெற்றி அடையும். சுபநிகழ்ச்சிகள் நடக்கும்.
தொழில், வியாபாரத்தில் போட்டியாளர்களின் தொல்லை தடையை தந்தாலும் பொருளாதார வகையில் பின்தங்கிய நிலை வராது. அதிக முதலீடு செய்ய வேண்டாம். ஏப். 8,9ல் எதிர்பாராத வகையில் பணவரவு இருக்கும். வேலை காரணமாக குடும்பத்தை விட்டு பிரிந்து இருந்த பணியாளர்கள் மார்ச் 30க்கு பிறகு ஒன்று சேருவர். அதன் பிறகு சிறப்பான பலனை காணலாம். பதவி உயர்வும், அதிகாரிகளின் ஆதரவும் கிடைக்கும். வேலைப்பளு குறையும். அலுவலகத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும்.
கலைஞர்களுக்கு புகழும் பாராட்டும் கிடைக்கும். புதிய ஒப்பந்தம் பெறலாம்.
அரசியல்வாதிகள் புதிய பதவி பெற வாய்ப்பு உண்டு.
மாணவர்களுக்கு முன்னேற்றம் தொடரும். போட்டிகளில் வெற்றி காணலாம். ஆசிரியர்களின் ஆதரவு கிடைக்கும். தேர்வு முடிவுகள் சிறப்பாக இருக்கும்.
விவசாயிகள் அதிகமாக உழைக்க வேண்டியது இருக்கும். பால் தொழிலில் முன்னேற்றம் காணலாம். புதிய சொத்து வாங்கும் எண்ணத்தை தற்காலிகமாக ஒத்தி போடுங்கள்.
பெண்களுக்கு கணவர் மற்றும் குடும்பத்தாரின் அன்பு கிடைக்கும். பண வரவு இருக்கும். மார்ச் 14,15 ஏப்.10,11 குதுõகலமான நாட்களாக அமையும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். கன்னியருக்கு திருமணம் நிச்சயமாக வாய்ப்புண்டு. ஏப். 2,3ல் புத்தாடை, நகை வாங்கலாம். உடல்நலம் சீராக இருக்கும்.
நல்ல நாள்: மார்ச் 14,15,21,22,23,24,28,29, ஏப். 2,3,8, 9,10,11
கவன நாள்: மார்ச் 16,17, ஏப். 12,13 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 4,8
நிறம்: வெள்ளை, பச்சை.
பரிகாரம்: முருகன் கோவிலுக்கு சென்று வாருங்கள். தினமும் காலையில் சூரியனை தரிசனம் செய்யுங்கள். சனிக்கிழமை சனி பகவானுக்கும், ஞாயிறு, திங்கள் கிழமைகளில் ராகு, கேதுவுக்கும் அர்ச்சனை செய்யுங்கள்.