நடப்பதெல்லாம் நன்மைக்கே என நினைக்கும் மகர ராசி அன்பர்களே!
சனி, செவ்வாய் மற்றும் சுக்கிரனின் நற்பலன்கள் தொடர்ந்து கிடைக்கும். சூரியனும் சாதகமான இடத்திற்கு வருவதால் பொருள் விரயம் குறையும். அவப்பெயர் மறையும். மார்ச் 30ல் புதன் இடம் மாறுவதால் பொருள் சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சகோதரிகளால் முன்னேற்றம் காண்பீர்கள். வீட்டிற்கு தேவையான சகல வசதிகளும் கிடைக்கும். கணவன், மனைவி இடையே அன்பு பெருகும். பிரிந்த தம்பதி ஒன்று சேருவர். குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிறர் அண்ணாந்து பார்க்கும் அளவுக்கு மாளிகை போன்ற வீடு கட்ட யோகம் கூடி வரும்.
தொழில், வியாபாரத்தில் லாபம் சிறப்பாக இருக்கும். பகைவர்களின் தொல்லையில் இருந்து விடுபடுவர். அரசின் சலுகை கிடைக்கும். மாத பிற்பகுதியில் சேமிப்பு அதிகரிக்கும். மார்ச் 16,17 ஏப். 12,13ல் எதிர்பாராத வகையில் பணவரவு இருக்கும். வரவு-செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும்.
பணியாளர்கள் உயர்ந்த நிலையை அடைவர். வேலையில் மன மகிழ்ச்சி ஏற்படும். சிலர் விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்க பெறலாம். கோரிக்கைகள் நிறைவேறும். மேல் அதிகாரிகள் ஆதரவுடன் இருப்பர். மார்ச் 25,26,27ல் நல்ல பலனை எதிர்பார்க்கலாம். தனியார் பணியாளர்களுக்கு புதிய பதவி அல்லது பதவி உயர்வு கிடைக்கும். நீண்டநாள் கோரிக்கை நிறைவேறும்.
கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெற்று நல்ல பொருளாதார வளம் காண்பர். விருது கிடைக்கும்.
அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு அதிகரிக்கும்.
மாணவர்கள் சிறப்பான நிலையில் இருப்பர். மாத பிற்பகுதியில் கூடுதல் பலனை எதிர்பார்க்கலாம். நல்ல மதிப்பெண்ணும் பாராட்டும் கிடைக்கும்.
விவசாயிகளுக்கு கிழங்கு, காய்கறி, பழவகை பயிர்கள் நல்ல மகசூல் தரும். பசு வளர்ப்பில் நல்ல பணம் கிடைக்கும். புதிய சொத்து வாங்குவதற்கான காலம் கனிந்து வரும்.வழக்கு, விவகாரங்கள் சாதகமாக இருக்கும்.
பெண்களுக்கு கணவன் மற்றும் குடும்பத்தாரிடம் நன்மதிப்பு கிடைக்கும். வேலை பார்க்கும் பெண்களுக்கு அதிக முன்னேற்றம் கிடைக்கும். ஏப். 6,7ல் புத்தாடை, நகை வாங்கலாம். மார்ச் 18,19,20ல் விருந்து விழா என சென்று வருவீர்கள். உடல் நலம் சிறப்படையும்.
நல்ல நாள்: மார்ச் 16,17,18,19,20,25,26,27,28,29, ஏப்.2,3,6,7,12,13.
கவன நாள்: மார்ச் 21,22 சந்திராஷ்டமம்.
அதிர்ஷ்ட எண்: 2,3,9.
நிறம்: செந்துõரம், வெள்ளை
பரிகாரம்: வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கும், ஞாயிறு, திங்களில் ராகு-கேதுவுக்கும் அர்ச்சனை செய்யுங்கள். துர்க்கை வழிபாடு நடத்துங்கள். நாக தேவதையை வணங்கி வாருங்கள். ஏழைகளுக்கு தானம் செய்யுங்கள்.
பகிர்கcopied
மேலும்
ஐப்பசி ராசி பலன் (18.10.2026 - 16.11.2026 ) »