தமிழ்நாட்டில் வெள்ளிக்கிழமை தேவி வழிபாட்டுக்கு உரிய புனித நாளாகக் கருதப்படுகிறது. வங்காளத்தில் செவ்வாய்க்கிழமை சனிக்கிழமை ஆகிய இரண்டு தினங்களையும் தேவி வழிபாட்டுக்கு உரிய விசேஷ நாட்களாகக் கருதுகிறார்கள். தேவி உபாசகர்கள், பஞ்ச பர்வாக்கள் தேவி உபாசனைக்கு உகந்தது என்று குறிப்பிடுகிறார்கள்.
பஞ்ச பர்வாக்கள் என்றால் ஐந்து காலங்கள் அல்லது ஐந்து நேரங்கள் என்று பொருள். அவை வருமாறு. 1. மாதப்பிறப்பு ( இதை மாச சங்கராந்தி அல்லது மாச ஸங்க்ரமண புண்ணிய காலம் என்றும் சொல்வார்கள்). 2. அமாவாசை 3. பவுர்ணமி 4. கிருஷ்ணபட்ச அஷ்டமி 5. சதுர்தசி ஆகியவையாகும்.