பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த கொக்குப்பாளையம் மகா பிரத்தியங்கராதேவி கோயிலில் அமாவாசையை முன்னிட்டு வற்றல் மிளகாய் யாகம் நடந் தது. அதனையொட்டி அன்று காலை 8:00 மணிக்கு மூலவர் பிரத்தியங்கராதேவிக்கு சிறப்பு பூஜை நடந்தது. மாலை 6:00 மணிக்கு சிறப்பு பூஜை, இரவு 7:30 மணிக்கு ரத்த புஷ்பாஞ்சலி, இரவு 8:00 மணிக்கு உலக நன்மை பெற வேண்டி வற்றல் மிளகாய் கொட்டி நிகும்பலா சிறப்பு யாகம் நடந்து. இரவு 8:30 மணிக்கு தீபாராதனை நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.