பதிவு செய்த நாள்
10
மார்
2016
11:03
காஞ்சிபுரம்: திருப்புட்குழி, மரகதவல்லி சமேத விஜயராகவ பெருமாள் கோவில் பிரம்மோற்சவத்தில், நேற்று காலை தேர் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. காஞ்சிபுரம் அடுத்த திருப்புட்குழி பகுதியில் பழமையான, விஜயராகவ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் பிரம் மோற்சவம், 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதன் முக்கிய விழாவான கருட சேவை, 5ம் தேதி நடைபெற்றது; நேற்று தேர் திருவிழா நடந்தது. காலை, 9:30 மணிக்கு துவங்கிய தேரோட்டத்தில், பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்து சென்றனர். திருப்புட்குழி பகுதி முக்கிய வீதிகளில் சுற்றி வந்து மரகதவல்லி, விஜய ராகவ பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பகல், 11:30 மணிக்கு, தேர் நிலைக்கு வந்தது. 12ம் தேதியுடன், திருவிழா நிறைவு பெறுகிறது.