நமது உள்ளம் இறைவனிடம் ஒடுங்க வேண்டும். இதற்கு நமக்கு உதவுபவரே குரு ஆவார். உலக வாழ்க்கை என்பது கரை காண இயலாத ஆழ்கடல் போன்றது. இதைக் கடப்பதற்குத் திசைகாட்டியாக விளங்குபவர் குரு.
கு என்ற சொல்லுக்கு அஞ்ஞானம் என்றும், ரு என்ற சொல்லுக்கு அஞ்ஞானத்தை நீக்குபவர் என்றும் பொருள்-இதுவே முதலாவது பொருள். கு என்பது குண விசேஷத்தையும், ரு என்பது ரூப விசேஷத்தையும் குறிக்கும். எனவே குரு என்பது குருவின் குண விசேஷத்தையும் (தெய்விகக் குணங்களையும்), ரூப விசேஷத்தையும் (தெய்விக உருவத்தையும்) குறிக்கிறது- இது இரண்டாவது பொருள். குறுந்தொகையில் உள்ள 252ம் பாடல் குருவை குலபதி என்று குறிப்பிடுகிறது.