க்ருஷி என்ற சொல் பூமியைக் குறிக்கும் சொல், ண என்ற சொல் ஆனந்தத்தைக் குறிக்கிறது. எனவே ஆன்மிக ஆனந்தத்திற்கு விளை நிலமாக இருக்கும் தன்மை உடையவர் என்பதால் விஷ்ணுவானவர் கிருஷ்ணன் என்று சொல்லப்படுகிறார். - இது வைணவச் சான்றோர்களின் கருத்தாகும். பக்தர்கள் உள்ளத்தில் ஞானத்தை (பகவத் விஷயத்தை) விதைத்து, பக்தியை வளர்த்து, உலகியல் விஷயங்களில் விரக்தியை உண்டாக்கி அவர்களை இறைவன் (ஆகர்ஷணம் செய்து) தன்னிடம் சேர்த்துக்கொள்கிறான் என்று, நம்மாழ்வார் கூறியிருக்கும் கருத்தும் இங்கு நினைவு கூரத்தக்கது.