பாலைவனத்தில் சந்தனமரம் தோன்றியதுபோல், அசுரர் கூட்டத்தில் பிரகலாதன் தோன்றினான். இறைத்தத்துவம் அண்ட சராசரத்திலுள்ள ஒவ்வோர் அணுவிலும் நிறைந்திருக்கிறது. இறைவன் தூணிலும் துரும்பிலும் இருப்பதை பிரகலாதனின் வரலாறு நமக்கு எடுத்துக்காட்டுகிறது. வைணவ பக்தர்களில் முதலாமவர் என்று வைணவம் பிரகலாதனைக் குறிப்பிடுகிறது.