பெரியகுளம் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15மார் 2016 11:03
பெரியகுளம்: பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயில் பங்குனி உத்திரத்திருவிழாவில் கொடியேற்றத்துடன் துவங்கியது. பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயில் பங்குனி உத்திரத்திருவிழா ஆரோகரா நாமம் ஒலிக்க கொடியேறத்துடன் துவங்கியது. திருவிழாவை முன்னிட்டு, முருகன் வள்ளி, தெய்வானை, சிவன், அறம்வளர்த்த நாயகி, நந்தி உட்பட தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, உற்சவர்கள் வீதி உலா நடந்தது. 10 நாட்கள் நடக்கும் திருவிழாவில் முக்கிய திருவிழாவான தேரோட்டம் மார்ச் 22ல் நடக்கிறது. திருப்பணிக்குழு தலைவர் சசிதரன், உறுப்பினர்கள் சிதம்பரசூரியவேலு, நாகராஜன், பாண்டியராஜ் மற்றும் மண்டகப்படிதாரர்கள் பக்தர்கள் கலந்து கொண்டனர்.