விருட்சம் என்றால் மரம். தேவலோகத்திலுள்ள கற்பக விருட்சம் கேட்டதை தரக்கூடியது. அதுபோல கோவில்களிலுள்ள மரங்களுக்கும் விசேஷ சக்தி உண்டு. மதுரை மீனாட்சி அம்மன் - கடம்ப மரம்- கல்வி அபிவிருத்தி குற்றாலம் குற்றாலநாதர்- பலா- இனிய வாழ்வு மயிலாடுதுறை மாயூரநாதர்- மாமரம்- வெற்றி திருநெல்வேலி நெல்லையப்பர்- மூங்கில்-இசை ஞானம் திருப்பனந்தாள் அருண ஜடேஸ்வரர்- பனை- உயர்ந்த வாழ்வு தென்காசி காசி விஸ்வநாதர் கோவில்- செண்பகம்- திருமண வரம் சென்னை திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரர்- மகிழ மரம்- தம்பதி ஒற்றுமை ஆழ்வார்திருநகரி பெருமாள்- புளிய மரம்- சகோதர பாசம் வைத்தீஸ்வரன்கோவில் வைத்தியநாதர்- வேப்பமரம்- ஆரோக்கிய வாழ்வு உத்தரகோசமங்கை (ராமநாதபுரம்) மங்களநாதர்- இலந்தை-தீர்க்க சுமங்கலி பாபநாசம் (திருநெல்வேலி) பாபநாசநாதர்-முக்கிளா- வேதத்தில் தேர்ச்சி.