வக்ரம் என்றால் வளைந்த என்றும், கோணலான என்றும் பொருள். வக்ரபுத்தி உள்ளவர் என்றால், கோணல் புத்தி உள்ளவர் என்று பொருள் கொள்ளலாம். இதன் அடிப்படையில் தான், தீயவழியில் நடப்பவர்களை வக்கிரம் பிடித்தவன் என்று சொல்வர். தெய்வங்களில் விநாயகருக்கு, வக்ர துண்டன் என்ற பெயருண்டு. வக்ரம் என்றால் வளைந்த, துண்டம் என்றால் துதிக்கை என்று பொருள். வளைந்த துதிக்கையை உடையவர் என்பது இதன் பொருள். கிரகங்கள் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பின்னோக்கிச் செல்வதை வக்ர கதி என்பர்.