கோ என்பதற்கு பகவான் என்றும், விந்தன் என்பதற்கு அடைபவன் என்றும் பொருள். நாம் கோவிந்தன் என்ற நாமத்தைத் தோணியாகப் பற்றினால், பிறவிப் பெருங்கடலைக் கடக்கலாம். கோ என்பதற்குப் பசு என்று பொருள், இங்கு பசு என்பது ஜீவாத்மாக்களைக் குறிக்கிறது. எனவே பசு என்ற சொல் மனிதர்களை மட்டுமின்றி அனைத்து உயிர்களையும் குறிக்கும் விந்தன் என்றால் காப்பவன் என்று பொருள். கோவிந்தன் என்ற சொல் அனைத்து உயிர்களையும் காப்பவன் அனைத்து உயிர்களாலும் அடையப்படும் பரம்பொருள் என்பதை உணர்த்துகிறது.