பதிவு செய்த நாள்
17
மார்
2016
02:03
வார நாட்களில் செவ்வாய் வெள்ளிக்கிழமை மற்றும் பவுர்ணமி மாலை வேளைகளில் தேங்காயில் நெய் விளக்கேற்றி வழிபாடு செய்து வர துன்பங்கள் பறந்துபோகும் வறுமைகள் நீங்கும். வெள்ளிக்கிழமைகளில் மாலை வேளைகளில் வில்வ இலைகளைக் கொண்டு பைரவப் பெரு மானின் சகஸ்ரநாம அர்ச்சனை செய்து வர, லட்சுமியின் அருள் கிட்டும்.
அனைத்து காரியங்களும் நன்மையாக: தேய்பிறை அஷ்டமி திதிகளில் செவ்வாடை அணிவித்து, நெய் விளக்கேற்றி நெய்யைப் பயன்படுத்தி செய்யப்பட்ட வடை மாலை சாற்றி, செவ்வரளி மலர்களைக் கொண்டு அர்ச்சனை செய்த, செவ்வாழைப்பழம் நைவேத்தியம் படைத்து வழிபட்டு வர அனைத்துக் காரியங்களும் நன்மையில் முடியும்.
குழந்தை பாக்கியம் பெற: ஆறு தேய்பிறை அஷ்டமியில் செவ்வரளி மலர் மற்றும் வில்வ இலைகளால் சகஸ்ரநாம அர்ச்சனை செய்தும் அல்லது 11 பவுர்ணமி தொடர்ந்து பூஜை செய்தும் அல்லது வியாழக்கிழமை காலை 7.30 மணிக்குள் சந்தனக்காப்பு செய்து முழு முந்திரிக்கொட்டை மாலை அணிவித்து அன்னம் படையலிட்டு அர்ச்சனை செய்தும் இயன்ற அளவு அன்னதானம் செய்துவர குழந்தை பாக்கியம் கிட்டும்.
வழக்கில் வெற்றி பெற: ஞாயிறு அன்று ராகு காலத்திலும் தேய்பிறை அஷ்டமி திதிகளிலும் வேப்ப எண்ணெயில் விளக்கேற்றி அர்ச்சனையில் முழுத்தேங்காய், செவ்வாழைப்பழம், தேன், தயிரன்னம் நைவேத்தியம் படைத்து வணங்கி வர ஏவல், பில்லி, சூனியம் போன்றவற்றில் இருந்து விடுபடுதல், எதிரிகளின் தொல்லை ஒழிதல், வழக்கில் வெற்றி பெறுதல், வியாபாரத்தில் லாபம் பெறுதல் ஆகியவை இனிதே நடைபெறும்.
திருமணம் விரைவில் நடைபெற: வெள்ளிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் பைரவருக்கு விபூதி அபிஷேகம் செய்து அல்லது சந்தனக் காப்பு செய்து புனுகு சாற்றி, நெய் வடைமாலை சாற்றி, சகஸ்ர நாம அர்ச்சனை செய்து வழிபட்டு வர திருமணமாகாத ஆண், பெண், வரன்களுக்கு விரைவில் திருமணம் முடியும்.
கல்வித் தடை நீங்க: புதன்கிழமைகளில் புதன் ஓரையில் பைரவருக்கு நெய் விளக்கேற்றி, அர்ச்சனை செய்து வழிபட்டுவர கல்வியில் ஏற்படுகிற தடைகள் நீங்கி முன்னேற்றம் ஏற்படும் பைரவருக்குத் தேன் அபிஷேகம் செய்து வழிபட அறிவு வளர்ச்சி ஏற்படும்.
இழந்த பொருள் கிட்ட: தினசரி மாலை வேளைகளில் மிளகு தீபம் ஏற்றி பைரவரை வழிபட்டு வர, இழந்த பொருள் கைக்குக் கிடைத்து சந்தோஷம் அடையலாம்.