பதிவு செய்த நாள்
18
மார்
2016
11:03
திருப்பதி: ஸ்ரீகாளஹஸ்தி கோவிலில், உண்டியல் காணிக்கை மூலம், 90 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தியில் உள்ள, ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் கோவிலில், 12 நாட்களாக, ஆண்டு பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடந்தது. விழாவின் போது, கோவிலை சுற்றி உள்ள சன்னதிகளில், காணிக்கை உண்டியல்கள் வைக்கப்பட்டன. இந்த உண்டியல்கள் நேற்று காலை திறக்கப்பட்டு, தட்சிணாமூர்த்தி சன்னதியில், கோவில் செயல் அதிகாரி பிரம்மராம்பா முன்னிலையில், எண்ணப்பட்டன. அதில், 90 லட்சம் ரூபாய் ரொக்கம், 325 கிலோ வெள்ளி, 172 வெளிநாட்டு கரன்சிகள் கிடைத்தன. இது, பிரம்மோற்சவ விழாக்கால உண்டியல் வருவாய் என, கோவில் அதிகாரிகள் கூறினர்.