பதிவு செய்த நாள்
19
மார்
2016
12:03
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர திருவிழாவில், ஆறாவது நாளான மார்ச்19, தேர் திருவிழா நடைபெறுகிறது.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பெருமான், சைவ குரவர்கள் நால்வர்களால் பாடல் பெற்ற பெருமைக்கு உரியவர்; இக்கோவில், பஞ்ச பூத தலங்களில் முதன்மையானதாக விளங்கி வருகிறது. பல நுாறு ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த தேர், 100 ஆண்டுகளுக்கு முன் எரிந்து விட்டதாக கூறப்படுகிறது. அதன் பின் சிறிய தேரில் சுவாமி ஊர்வலம் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன், புதிய தேர் செய்யப்பட்டு, தற்போது பங்குனி உத்திர திருவிழாவில், ஆண்டுதோறும் அந்த தேரில், தேரோட்டம் விமர்சையாக நடைபெற்று
வருகிறது.
மார்ச்19, காலை, 6:00 மணிக்கு ஏகாம்பரநாதர், ஏலவார் குழலி திருதேரில் எழுந்தருள்வர். 7:30 மணிக்குள் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து, நான்கு ராஜ வீதிகளில் தேர் வலம் வரும்.
இத்திருவிழாவில் பல்வேறு மாநிலங்களின் வாத்தியங்கள், சிவ வாத்தியங்கள் முழங்க, தேர் திருவிழா நடைபெறுகிறது. திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்கு, 1,000 கால் மண்டபத்தில் அன்னதானம் நடைபெறும். திருவேகம்பன் சிவாலய அறக்கட்டளை தலைவர் பி.பன்னீர்செல்வம் இதற்கான ஏற்பாட்டை செய்துள்ளார்.