சென்னிமலை முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22மார் 2016 12:03
சென்னிமலை: சென்னிமலையில் பங்குனி உத்திர தேர் திருவிழா, கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. சென்னிமலை முருகன் கோவிலில், வேறு எந்த கோவிலிலும் இல்லாத தனி சிறப்பாக, தைப் பூசம் மற்றும் பங்குனி உத்திர தேர் என இரண்டுக்கும் தனித்தனியாக பெரிய தேர்கள் உள்ளன. இந்நிலையில் பங்குனி உத்திர தேரோட்டம், கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. இதையொட்டி முருகன், வள்ளி, தெய்வானை மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. இதை தொடர்ந்து, சேவல் கொடி ஏற்றப்பட்டு முறைப்படி விழா தொடங்கியது. இன்று (22ம் தேதி) இரவு, திருக்கல்யாணம் நடக்கிறது. நாளை (23ம் தேதி) காலை, 6 மணிக்கு தேரோட்டம் துவங்குகிறது. மாலை, 5 மணிக்கு தேர் நிலை சேரும்.