Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றத்தில் ... உயிரைக் காப்பாற்றும் விரதம்! உயிரைக் காப்பாற்றும் விரதம்!
முதல் பக்கம் » துளிகள்
தேவகனி எலுமிச்சையின் மகிமை தெரியுமா?
எழுத்தின் அளவு:
தேவகனி எலுமிச்சையின் மகிமை தெரியுமா?

பதிவு செய்த நாள்

22 மார்
2016
12:03

ராகு காலத்தில் எலுமிச்சையை துர்க்காதேவிக்கு தீபம் ஏற்று பயன்படுத்துகிறார்கள். சூலாயுதங்களில் எலுமிச்சை குத்தப்படுகிறது. இதற்கு காரணம் எலுமிச்சை தேவ கனி என்பதால் ஆகும். மாம்பழத்தில் வண்டு குற்றம் உண்டு. பலாவில் வியர்வை குற்றம் உண்டு. வாழையில் புள்ளி குற்றம் உண்டு. ஆனால் எலுமிச்சையில் மட்டும் இவ்வித குற்றங்கள் இல்லை. மனிதனுடைய எண்ணங்களை ஈர்க்கும் சக்தி மற்ற கனிகளைக் காட்டிலும் எலுமிச்சைக்கு அதிகம் உண்டு.

எலுமிச்சை பயன்கள்: எலுமிச்சை - இதை தேவக்கனி, இராஜக்கனி என்றும் கூறுவார்கள். எல்லா பழங்களையும் எலி கடித்து விடும் ஆனால் எலுமிச்சையை மட்டும் எலி தொடவே தொடாது. எலி மிச்சம் வைத்ததாதல்தானோ என்னவோ இந்தப் பழத்திற்கு எலிமிச்சை என்று பெயர் வந்திருக்கலாம் என சித்தர்கள் மூலம் அறியப்படுகிறது. எலுமிச்சை புளிப்பு சுவை மிக்க மஞ்சள் நிறப்பழத்தைக் கொடுக்கும் ஒரு வகைத்தாவரம். இது சிட்ரஸ் லிமன் என்னும் அறிவியல் பெயர் கொண்டது. எலுமிச்சம் பழச் சாற்றில் 5% அளவுக்கு சிட்ரிக் அமிலம் உண்டு.

இதன் தனித்துவமான சுவை காரணமாக இதனை அடிப்படியாகக் கொண்டு பல வகையான பானங்களும், இனிப்பு வகைகளும் தயாரிக்கப் பட்டு ஆக்கப்பட்டு வருகின்றன.

100 கிராம் எலுமிச்சை பழத்தில் உள்ள சத்துக்கள் நீர்ச்சத்து - 50 கிராம், கொழுப்பு - 1.0 கிராம், புரதம் -1.4 கிராம், மாவுப்பொருள் - 11.0 கிராம், தாதுப்பொருள் - 0.8 கிராம், நார்ச்சத்து - 1.2 கிராம், சுண்ணாம்புச் சத்து - 0.80 மி.கி. பாஸ்பரஸ் - 0.20 மி.கி. இரும்புச் சத்து - 0.4 மி.கி.கரோட்டின் - 12.மி.கி. தையாமின் - 0.2 மி.கி. நியாசின் - 0.1 மி.கி. வைட்டமின் ஏ - 1.8 மி.கி. வைட்டமின் பி - 1.5 மி.கி. வைட்டமின் சி - 63.0 மி.கி இதிலுள்ள அதிகமான வைட்டமின் சி சத்தும், ரிபோஃப்ளோவினும் புண்களை ஆற்ற வல்லது. எலுமிச்சை சாறுடன் நீர் கலந்து சிட்டிகை உப்பு போட்டு தொண்டையில் படுமாறு பலமுறை கொப்பளிக்க தொண்டைப்புண், வாய்ப்புண் ஆறும்.

எலுமிச்சைச் சாறுடன் நீர் கலந்து அடிக்கடி வாய் கொப்பளித்தால் வாய் துர் நாற்றம் மறையும். வாந்தியா? எலுமிச்சைச் சாறுடன், இஞ்சிச் சாறு, சிறிதளவு தேன் சேர்த்து, வெதுவெதுப்பான நீரில் கலந்து சாப்பிட விரைவில் குணம் தெரியும். எலுமிச்சைச் சாறுடன் வெந்நீர் கலந்து குடிக்கும் போது நெஞ்செரிச்சல், ஏப்பம், வயிறு உப்புசம் குறையும். ஜீரணசக்கியும் அதிகரிக்கும். கல்லீரலைப் பலப்படுத்த சிறந்த டானிக் எலுமிச்சை. பித்தநீர் சரியான அனவில் சுரக்க வழிசெய்கிறது. பித்தப்பையில் ஏற்படும் கற்களைக் கரைக்க உதவுகிறது. சருமப் புண்களுககு ஆன்டிசெப்டிக்காகப் பயன்படுகிறது. எலுமிச்சைச் சாற்றை முகத்தில் தடவிவர, முகத்திலுள்ள கரும்புள்ளிகள் மற்றும் சுருக்கங்கள் மறைகின்றன. பாலேட்டுடன் எலுமிச்சைச் சாறு கலந்து முகத்தில் தடவினால் சரும நிறம் பளிச்சிடும்.

தினமும் காலையில் வெறும் வயிற்றில் இளஞ்சூடான நீரில் எலுமிச்சைச் சாறு, ஒரு டீஸ்பூன் தேனூடன் பருகி வர உடல் எடை
குறையும். பொட்டாசியம் அதிகமான அளவில் இருப்பதால் இதயக் குறைபாடுகளை நீக்க உதவுகிறது.  உயர் இரத்த அழுத்தம், தலைச்சுற்றல், வயிற்றுப் பிரட்டல் போன்ற உபாதைகள் நீங்கும். இரவு நேரத்தில் வெதுவெதுப்பான நீரில், எலுமிச்சைச் சாறுடன் தேன் கலந்து குடித்தால் நல்ல தூக்கம் வரும். உடல் மட்டுமின்றி, மனமும் அமைதி அடையும். மனஅழுத்தம், ஸ்ட்ரெஸ், நீங்கும். உடலிலிருந்து நச்சுப் பொருள்களையும், பாக்டிரியாக்களையும் வெளியேற்றி மூட்டுவலிக்கு நிவாரணம் அளிக்கிறது.

இரத்த சுத்தகரிப்பாக உதவுகிறது, காலரா, மலேரியா போன்ற காய்ச்சலின் போது விஷக்கிருமிகளின் தாக்கத்தை நீக்கப்பெரிதும் உதவுகிறது. சில துளிகள் எலுமிச்சைச் சாறை நீர் கலக்காமல் அப்படியே விட்டுக் கொண்டால் நாக்கின் சுவை அரும்புகள் தூண்டப்பட்டு, சுவை தெரியும்.  தலையில் பொடுகுத் தொல்லை நீங்க, எலுமிச்சைச் சாறினை தடவி சிறிது நேரம் ஊறியபின் குளித்தால், பொடுகுத் தொல்லை நீங்கும். சிறிய பழம் பயன்கள் அதிகம் இதனைப்பயன்படுத்தி நோயற்ற வாழ்க்கை வாழ்வோம்.  கனிகளில் மதியூக மந்திரி குணத்தை உடையது எலுமிச்சை. எலுமிச்சைச் சாறை அப்படியே பயன்படுத்தக் கூடாது. நீருடன் அல்லது தேன் போன்றவற்றுடன் பயன் படுத்த வேண்டும்.  இவ்வளவு பயன் தரும் தேவகனி (எலுமிச்சை) வரலாற்றுச் சிறப்பு மிக்கது என்றால் அது மிகையல்ல.

 
மேலும் துளிகள் »
temple news
முருகா என்றால் மும்மூர்த்திகளான அம்சம் பொருந்தியவன் என்று அர்த்தம். முருகனுக்கு எத்தனையோ விழாக்கள் ... மேலும்
 
temple news
ராதா நந்தவன்னைச் சேர்ந்தவள். இளம் வயதிலேயே கிருஷ்ணனும், ராதாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் காதல் ... மேலும்
 
temple news
129 வருடங்களுக்கு முன்பு சென்னையில், 1897-ஆம் ஆண்டில், பிப்ரவரி 6 முதல் 14 வரை தேதிகளில் சுவாமி விவேகானந்தர் ... மேலும்
 
temple news
ஏகாதசி விரதத்திற்கு பாவத்தைப் போக்கும் சக்தி உண்டு. விஷ்ணுவின் அம்சமாகத் தோன்றிய சக்தியே ஏகாதசி. ... மேலும்
 
temple news
எல்லா தெய்வங்களுக்கும் ஜெயந்தி தினம் கொண்டாடும் ஆன்மிகர்கள், சூரியனுக்கும் ஒரு ஜெயந்தி தினத்தைக் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar