பங்குனி உத்திர நன்னாளில் தான் சீதாராமர் கல்யாணம் நடந்தது. இந்நாளில் ராமருக்கு துளசி மாலை சாத்தி பானகம் அல்லது நீர்மோர் நைவேத்யம் செய்து ராமாயணம் படிப்பார்கள். குறிப்பாக பாலகாண்டத்திலுள்ள 73வது அத்தியாயமான சீதா கல்யாணத்தை படிப்பது சிறப்பு. இதன் மூலம் கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணயோகம் உண்டாகும். பிரிந்திருக்கும் தம்பதியர் விரைவில் ஒன்று சேரவும் இந்த வழிபாடு நன்மையளிக்கும்.