தலையணை மந்திரம் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். காது மந்திரம் என்றால் என்ன தெரியுமா? ராம என்பதற்கு ஆனந்தம் என்று பொருள். தன்னைச் சரணடைந்த பக்தர்களுக்கு ஆனந்தம் அளிப்பவர் இவர். ஓம் நமோ நாராயணாய என்னும் எட்டெழுத்து மந்திரத்தில் உள்ள ரா வும், நமசிவாய என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தில் உள்ள மவும் இணைந்த மந்திரமே ராம என்பதாகும். இந்த இரு எழுத்துக்களும் இந்த மந்திரத்தின் உயிர்நாடியாக அமைந்துள்ளன. இதை பக்தியுடன் 108 முறை ஜெபித்தால் நல்ல புத்தி, ஆனந்தம், செல்வ வளம், மன அமைதி கிடைக்கும். காசியில் இறக்கும் உயிர்களின் வலது காதில் சிவன் ராம என்னும் நாமத்தை ஜெபித்தே முக்தி அளிப்பதாக ஐதீகம். அழிவற்ற வடிவமான ராமனையும், அவன் பெயரையும் தினமும் சொல்லி அழிவில்லாத ஆனந்தம் அடையலாம், என்கிறார் காஞ்சிப்பெரியவர்