அந்தியூர்: அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில், பூச்சாட்டுதல் விழா, கடந்த, 17ம் தேதி தொடங்கியது. ஏப்., 6ம் தேதி குண்டம் திருவிழா நடக்கிறது. இந்நிலையில் மகிஷாசூரமர்தனம் என்ற நிகழ்ச்சி இன்று காலை நடக்கிறது. மனித உடல், எருமை தலை கொண்ட மகிஷாசூரன் என்ற கொடிய அரக்கன், மக்களை துன்பப்படுத்தினான். அவனை அழிக்க வேண்டி, அம்மனிடம் மக்கள் தஞ்சம் அடைந்தனர். எட்டு கைகளுடன் அம்மன் தோன்றி காளி அவதாரம் எடுத்து, அரக்கனை அழித்ததாக கூறப்படுகிறது. இதற்காக திருவிழாவின் போது அம்மனுக்கு நன்றி செலுத்தும் விதமாகவும், விழா எவ்வித தடையுமின்றி நடக்கவும், குண்டத்துக்கு அருகில் குழி வெட்டி எருமைக்கிடா பலி தருவது ஐதீகமாக உள்ளது. இதற்காக நேற்று முதலே பக்தர்கள், நேர்த்திக் கடனாக எருமை கன்றுகளை கோவிலுக்கு கொடுத்து வருகின்றனர். இதில் ஒரு கன்று மட்டும், பலி தரப்படும். மற்றவை ஏலத்தில் விடப்படும்.