பதிவு செய்த நாள்
24
மார்
2016
12:03
வால்பாறை: பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில் நடந்த திருக்கல்யாணத்தில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். வால்பாறை, ஸ்ரீசுப்ரமணிய சுவாமி கோவிலின், 64ம் ஆண்டு பங்குனி உத்திரத் திருவிழா, கடந்த மாதம், 20ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று மாலை 4:00 மணியளவில், முருகன் நற்பணி மன்றத்தலைவர் மதனகோபால் தலைமையில் திருமண சீர்வரிசை கொண்டு வரப்பட்டு, மாலை 5:15 மணிக்கு, திருக்கல்யாணம் நடந்தது. இதில், சுற்றுவட்டாரத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று காலை 8:00 மணியளவில், அண்ணாநகர் சின்னையன் முருகபக்தர்கள் குழுவினர் மற்றும் அண்ணாநகர் இளைஞர் குழுவினர் சார்பில், நல்லகாத்து ஆற்றிலிருந்து, பக்தர்கள் காவடி எடுத்து வருகின்றனர். விழா ஏற்பாடுகளை, முருகன் நற்பணி மன்ற நிர்வாகிகள் வள்ளிக்கண்ணு, சிங்காரம், சீனிவாசன், இருளப்பன் உட்பட பலர் செய்து வருகின்றனர்.