சின்னாளபட்டி: அம்பாத்துறை பத்ரகாளியம்மன் கோயிலில் பங்குனி உற்சவம் நடந்தது. கடந்த மார்ச் 15ல் கொடியேற்றம் நடந்தது. மார்ச் 22ல் அம்மன் அஸ்வ வாகனத்தில் ஆரோகணம் செய்து சக்தி இறக்கி வான வேடிக்கைகளுடன் கரகம் ஜோடித்து அழைத்து வரப்பட்டது. மறுநாள் மாவிளக்கு எடுத்தல், பொங்கல் வைத்தல், அக்னிசட்டி எடுத்தல் நடந்தன. நேற்று காலை பால்குடம் எடுத்து வரப்பட்டு அம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது. மாலையில் மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. அம்மன் கரகத்துடன் மஞ்சள் நீராடி கங்கை சேர்க்கப்பட்டது. ஜமீன்தார் ஹரிகிருஷ்ணசாமி, இளைய ஜமீன்தார் துரைப்பாண்டி தலைமையில் அனைத்து சமுதாய முக்கிய பிரமுகர்களும் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.