தேவர்களுக்கு தீங்கிழைத்த அசுரர்களை சக்கரபாணியாக வந்த திருமால், காவிரிக்கரையில் சம்ஹாரம் செய்து அழித்தார். அவர் கும்பகோணத்தில் சக்ரபாணி என்ற திருநாமத்தோடு வீற்றிருக்கிறார். தாமரைப் பூ சக்கரத்திலுள்ள, அறுங்கோண யந்திரத்தில் நின்ற கோலத்தில் காட்சியளிப்பதால் இப்பெயர் வந்ததாகவும் சொல்வர். இவர் சங்கு, சக்கரம், வில், கோடரி, உலக்கை, கதை, மண்வெட்டி, தாமரை ஏந்தியிருக்கிறார். ருத்ர அம்சம் கொண்டவராக இருப்பதால் வில்வ இலையால் அர்ச்சனை செய்வர்.