பதிவு செய்த நாள்
27
ஆக
2011
04:08
ஒரு முறை நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் வீட்டிற்கு ஒரு ஏழைப் பெண்மணி வந்தார். அப்போது அவர்கள் வீட்டில் இல்லை. அவர்களது துணைவியார் அன்னை ஆயிஷா (ரலி) வீட்டில் இருந்தார். அப்பெண்மணி தன் இரண்டு பெண் குழந்தைகளையும் அவர்களுடன் அழைத்து வந்திருந்தார். அவரது கையில் மூன்று பேரீச்சம்பழங்கள் இருந்தன. குழந்தை
களுக்கு ஆளுக்கொன்றாக கொடுத்துவிட்டு, இன்னொரு பழத்தை தான் சாப்பிட எண்ணி, வாயில் போட இருந்த வேளையில்,"" அம்மா! அதையும் எனக்கு கொடேன், என இரண்டு குழந்தைகளும் கேட்டனர்.
அந்த அன்புத்தாய்,"" என் கண்மணிகளே! உங்களுக்கு இல்லாததா? எனக் கூறியபடி, அதை இரண்டாகப் பிரித்து ஆளுக்கொரு துண்டாக கொடுத்து விட்டார். ஆயிஷா (ரலி) இதைப் பார்த்து ஆனந்தப்பட்டார். தன் அன்புக்கணவர் வந்ததும் அந்த சம்பவம் பற்றி சொன்னார்.
நாயகம் (ஸல்) அவர்கள் ஆயிஷா அம்மையாரிடம்,"" அப்பெண்ணின் அந்த அன்புச் செயலுக்காக, அல்லாஹ் அவளுக்கு சொர்க்கத்தை நிச்சயமாக்கிவிட்டான். நரகத்தை விட்டு அப்பெண்ணை விடுவித்து விட்டான், என்றார்கள்.
குழந்தைகள் மீது குறிப்பாக பெண் குழந்தைகள் மீது அன்பு காட்டுவோருக்கு சொர்க்கம் உறுதி என நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் அழுத்தம் திருத்தமாகக் கூறுகிறார்கள். இன்றைக்கும் எத்தனையோ தாய்மார்கள், தங்கள் வாயைக்கட்டி, வயிற்றைக் கட்டி குழந்தைகளை படிக்க வைக்கிறார்கள். தங்கள் உணவை அவர்களுக்கு கொடுக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் அல்லாஹ் சொர்க்கத்தை உறுதியாக்கி இருக்கிறான்.
இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6.39மணி
நாளை நோன்பு வைக்கும் நேரம்: காலை 4.34 மணி.