பதிவு செய்த நாள்
31
மார்
2016
11:03
பொள்ளாச்சி: பொள்ளாச்சி ஜமீன் ஊத்துக்குளி மாகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழாவில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்தனர். இக்கோவில் திருவிழா, கடந்த 15ம் தேதி சக்தி கும்ப ஸ்தாபனத்தோடு துவங்கியது. கடந்த, 17ம் தேதி கோவில் பூவோடு வைத்தல், 23ம் தேதி கொடுமுடி தீர்த்தம் கொண்டு வருதல், 25ம் தேதி பழநி தீர்த்தம் கொண்டு வருதல், 26ம் தேதி நல்லூத்து தீர்த்தம் கொண்டு வருதல், 27ம் தேதி கூடுதுறை தீர்த்தம் கொண்டு வருதல், 28ம்தேதி தெய்வகுளம் தீர்த்தம் கொண்டு வருதல் நடந்தன. தொடர்ந்து, 29ம் தேதி காலை, 7:00 மணிக்கு குண்டம் திறப்பு, மாலை, 4:00 மணிக்கு பூவோடு புறப்பாடு, இரவு, 8:00 மணிக்கு அகத்தூர் அம்மன் தீர்த்தம் கொண்டு வருதல், 9:00 மணிக்கு அக்னி குண்டம் வளர்த்தல் நடந்தன. நேற்று காலை, 7:00 மணிக்கு நடந்த பூக்குண்டம் இறங்கும் நிகழ்வில், திரளான பக்தர்கள் தீ மிதித்தனர். காலை, 8:00 மணிக்கு அம்மனுக்கு பொங்கல் வைத்து, மாவிளக்கு எடுக்கப்பட்டது. இன்று காலை, 9:00 மணிக்கு சுவாமி ஊர்வலம், மஞ்சள் நீராடுதல், இரவு, 8:00 மணிக்கு மகா அபிேஷகத்துடன் திருவிழா நிறைவு பெறும்.