பதிவு செய்த நாள்
31
மார்
2016
11:03
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் கோமளவல்லி சமேத யதோக்தகாரி சுவாமி என, அழைக்கப்படும், சொன்ன வண்ணம் செய்த பெருமாள் கோவில் பங்குனி பிரமோற்சவம், நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்று விளங்கும் வைணவ கோவில்களில் சிறப்பு பெற்றதும், 108 திவ்விய தேசங்களில் ஒன்றுமான, யதோக்தகாரி பெருமாள் கோவில் பங்குனி பிரமோற்சவம் நேற்று காலை, 5:30 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. அதன் பின், ஸ்ரீதேவி, பூதேவியருடன் பெருமாள் சப்பர வாகனத்தில் சின்ன காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் பெருமாள் கோவில் வரை சென்று திரும்பி, யாகசாலை மண்டபத்தில் எழுந்தருளி, கோவிலை சென்றடைந்தார். மாலை, 6:30 மணிக்கு சாமி சிம்ம வாகனத்தில் வீதிவுலா நடைபெற்றது. இந்த பிரம்மோற்சவத்தின் முக்கிய விழாவான மூன்றாம் நாளான, வெள்ளி கிழமை காலை, 6:00 மணிக்கு கருடசேவையும், ஏழாம் நாள் தேர் திருவிழாவும் நடைபெற இருக்கிறது; வரும் 8ம் தேதி திருவிழா நிறைவு பெறுகிறது.