பதிவு செய்த நாள்
29
ஆக
2011
11:08
பொள்ளாச்சி : பொள்ளாச்சி அடுத்த ஒக்கிலிபாளையம் சீனிவாச பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் வரும் 2ம் தேதி நடக்கிறது.பொள்ளாச்சி அடுத்த ஒக்கிலிபாளையத்தில், தேவி, பூதேவி சமேத ஸ்ரீனிவாச பெருமாள் கோவில், தல்லி பாலாஜி அம்மாள், கெங்கம்மாள் கோவில் உள்ளது. பழமை வாய்ந்த இக்கோவிலில் மேற்கொள்ளப்பட்ட புரனமைப்பு பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன. இதையடுத்து, 31ம் தேதி மாலை கும்பாபிஷேக விழா துவங்குகிறது. வரும் செப்., 2ம் தேதி காலை 6.30 மணிக்கு ஹோமம், பூர்ணாகுதி, பெரிய சாற்றுமுறை, யாத்ராதானம் ஆகியவையும், 9.00 மணிக்கு கடம் புறப்பாடும், 9.30 மணிக்கு விமான கலசங்களுக்கு கும்பாபிஷேகமும் காலை 10.00 மணிக்கு சீனிவாச பெருமாளுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. காலை 10.30 மணிக்கு அன்னதானமும், பகல் 12.00 மணிக்கு மகா அபிஷேகமும் இடம்பெறுகிறது. விழாவுக்கான, ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.