பழநி மலைக்கோயிலில் மீண்டும் தாரை தப்பட்டைக்கு அனுமதி பக்தர்கள் கோரிக்கை ஏற்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஏப் 2016 12:04
பழநி: பழநி மலைக்கோயிலில் மீண்டும் தாரை தப்பட்டை, டிரம்செட் அடிக்க பக்தர்கள் நேற்று முதல் அனுமதிக்கப்படுகின்றனர். பழநி மலைக்கோயிலில் விழாக்காலங்களில் காவடிகளுடன் குழுவினராக வரும் பக்தர்கள் தாரைதப்பட்டை, டிரம்செட் அடித்து ஆட்ட பாட்டத்துடன் மலைக்கோயிலில் குவிகின்றனர். இதனால் பிற பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுகிறது என கோயில் நிர்வாகம் டிரம்செட் பயன்பாட்டுக்கு தடை விதித்தது. இதற்கு பக்தர்கள், இந்துஅமைப்புகள் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் நேற்று கோயில் இணை ஆணையர் ராஜமாணிக்கத்திடம் இந்து முன்னணி மாவட்டசெயலளர் ஜெகன், விஸ்வ இந்துபரிஷத் நகர செயலாளர் செந்தில்குமார், பா.ஜ.,நகர தலைவர் கனகராஜ் மற்றும் பழநி மலைக்கோயில் பாதுகாப்போர் சங்கத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினர். மீண்டும் டிரம்செட், தாரை தப்பட்டையை பயன்படுத்த அனுமதிக்கும்படி வலியுறுத்தினர். அவர்ளது கோரிக்கையை ஏற்று கோயில் நிர்வாகம் நேற்றுமுதல் மலைக்கோயிலில் டிரம்செட், தாரைதப்பட்டை முழங்க அனுமதித்தது. இதையடுத்து பக்தர்கள் தாரை தப்பட்டையுடன் கோவில் சென்றனர். கோயில் அதிகாரி ஒருவர் கூறுகையில்,“மலைக்கோயிலில் டிரம்செட்டுன் குவியும் பக்தர்கள் நீண்டநேரம் ஒரே இடத்தில் நின்று ஆடிப்பாடுவதால் பிற பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. தற்போது திருவிழா முடிந்துவிட்டதாலும், இந்து அமைப்புகள் கோரிக்கையை ஏற்றும் டிரம்செட் பயன்படுத்த பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்,” என்றார்.