சாத்துார் மாரியம்மன், காளியம்மன் கோயில் பொங்கல் விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஏப் 2016 12:04
சாத்துார்: சாத்துார் மாரியம்மன், காளியம்மன் கோயில் பொங்கல்விழா நேற்று நடந்தது. பொங்கலை முன்னிட்டு மார்ச் 27ல் கால்நடும் நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து தினமும் அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்தார்.தினமும் மண்டகப்படியார் சார்பில் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. மாலையில் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் வழிபாடு நேற்று இரவு 7.45 மணிக்கு வைப்பாற்றில் இருந்து கோயிலுக்கு கரகம் எடுத்து வருதல் நடந்தது. அண்ணாநகர், பெரியார்நகர், சிதம்பரம்நகர், குருலிங்காபுரம், தென்வடல்புதுத்தெரு, மேலக்காந்திநகர், ஆண்டாள்புரம், பிள்ளையார் கோவில்தெரு, காட்டுப்புதுத்தெரு பகுதிகளை சேர்ந்தவர்கள் கோயில் வாசலில் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். பின்னர் அதிகாலை 3 மணிக்கு காளியம்மன் கோயில் முன்பு பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தினர். நுாற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். திருவிழாவிற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியார், கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.