பழநி பங்குனி உத்திர திருவிழா உண்டியல் வசூல் ரூ.1.97 கோடி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஏப் 2016 11:04
பழநி: பழநி மலைக்கோயிலில் உண்டியலில் 20 நாட்களில் ரொக்கமாக ரூ. 1 கோடியே 97 லட்சத்து 10 ஆயிரம் கிடைத்துள்ளது. பழநியில் மார்ச் 17 முதல் 26 வரை பங்குனி உத்திர திருவிழா நடந்தது. ஏராளமான பக்தர்கள் தீர்த்தக் காவடிகளுடன் குவிந்தனர். இதன் காரணமாக மலைக்கோயிலில் நிரம்பிய உண்டியல்கள் திறக்கப்பட்டு கார்த்திகை மண்டபத்தில் எண்ணப்பட்டது. அதில் தங்கம் 580 கிராம், வெள்ளி 12 ஆயிரத்து 300 கிராம், வெளிநாட்டு கரன்சி 1176 மற்றும் ரொக்கம் ரூ. 1 கோடியே 97 லட்சத்து 10 ஆயிரத்து 245 கிடைத்துள்ளது. தங்கத்திலான வேல், தொட்டில், வெள்ளியிலான தொட்டில், முருகன் சிலைகள் உள்ளிட்ட பொருட்களை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். இணை ஆணையர் ராஜமாணிக்கம், துணை ஆணையர் மேனகா, திண்டுக்கல் உதவி ஆணையர் சிவலிங்கம், முதுநிலைகணக்கியல் அலுவலர் வீரச்சாமி, வங்கிப்பணியாளர்கள், கல்லுõரி மாணவிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இன்றும் உண்டியல் எண்ணிக்கை நடக்கிறது.