பதிவு செய்த நாள்
07
ஏப்
2016
11:04
அவிநாசி :அவிநாசியில், அழகு நாச்சியம்மன் கோவில் பொங்கல் பூச்சாட்டு விழாவையொட்டி, பூவோடு எடுத்து, பெண்கள் ஊர்வலமாக சென்றனர்.கடந்த மார்ச், 29ல் காப்புக்கட்டு அபிஷேகத்துடன் விழா துவங்கியது. தினமும் காலை, மாலையில், அம்மனுக்கு அபிஷேகம், சுவாமி புறப்பாடு நடைபெற்றது. நேற்று அதிகாலை, படைக்கலம் எடுத்தல், அம்மை அழைத்தல், சிம்ம வாகனத்தில் அழகு நாச்சியம்மன் வீதியுலா ஆகியன நடைபெற்றன.நேர்ந்து கொண்ட பெண்கள், பூவோடு மற்றும் மாவிளக்கு எடுத்து, நான்கு ரத வீதிகளில் ஊர்வலமாக சென்றனர். அதன்பின், அம்மனுக்கு மகாபிஷேகம், பொங்கல் வைத்தல், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. விழாவையொட்டி, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று, மஞ்சள் நீர் விழா, மகா அபி÷ஷகத்துடன் பொங்கல் பூச்சாட்டு விழா நிறைவடைகிறது. குழந்தைகளின் கலை நிகழ்ச்சி, மாலை, 6:30 மணிக்கு நடக்கிறது.