மணக்குள விநாயகர் கோவிலில் 2ம் தேதி பிரம்மோற்சவம் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஆக 2011 11:08
புதுச்சேரி : மணக்குள விநாயகர் கோவிலில் 55ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா, 2ம் தேதி துவங்கி 25ம் தேதி வரை நடக்கிறது. புதுச்சேரியில் பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் கோவில் பிரம்மோற்சவ விழா வரும் 2ம் தேதி காலை 11 மணிக்கு விக்னேஸ்வர பூஜையுடன் துவங்குகிறது. 7ம் தேதி சித்தி புத்தி திருக்கல்யாணம், 11ம் தேதி காலை 9 மணிக்கு ரதோற்சவம், 12ம் தேதி காலை 9 மணிக்கு பவுர்ணமி கடல் தீர்த்தவாரி உற்சவம் நடக்கிறது. 13ம் தேதி இரவு 8 மணிக்கு வேதபுரீஸ்வரர் கோவில் குளத்தில் தெப்பல் உற்சவம் நடக்கிறது. 18ம் தேதி பலசுப்ரமணியர் உற்சவம், 19ம் தேதி ஊஞ்சல் உற்சவம், 21ம் தேதி விநாயகர் சந்திரபிரபை உற்சவம், 25ம் தேதி மதியம் 12 மணிக்கு 108 சங்காபிஷேகம் நடக்கிறது. பிரம்மோற்சவத்தையொட்டி தினமும் சிறப்பு அபிஷேகம், இரவு சுவாமி வீதியுலா நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி வேங்கடேசன் மற்றும் அறங்காவலர் குழுவினர் செய்து வருகின்றனர்.