ராமநாதபுரம்: ஷீரடி சாய்பாபா பிறந்தநாளையொட்டி, ராமநாதபுரம் அருகே குயவன்குடி கிராமத்தில் உள்ள ஸ்ரீ ஷீரடி சாய் ஆச்சார்யா தயான் மந்தீரில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சாய்பாபாவுக்கு மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டிருந்தது.கோயிலில் காலை 6 மணி, மதியம் 12 மணி, மாலை 6 மணி, இரவு 8 மணி என நான்கு முறை ஆராதனை நடந்தது. தினமும், இதே போல் நடக்கிறது. தினமும் காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரையும், மாலை 4.30 முதல் இரவு 8 மணி வரையும் கோயில் நடை திறந்திருக்கும்.நேற்று சாய்பாபா பிறந்தநாளையொட்டி ஏராளமான பக்தர்கள் சாய்பாபாவை தரிசித்தனர்.