விஸ்வாமித்திரரை குருவாக ஏற்று ராம, லட்சுமணர் காட்டுக்குப் புறப்பட்டனர். அங்கு தாடகை என்னும் அரக்கியை வதம் செய்யும்படி விஸ்வாமித்திரர் ராமனுக்கு கட்டளைஇட்டார். பெண்பாவம் பொல்லாதது என்பதால் ராமனின் மனம் தடுமாறியது. பெண்ணைக் கொல்லக்கூடாது என்று வேதம் வேலியிட்டிருப்பதும் நினைவுக்கு வந்தது. ஆனாலும் விஸ்வாமித்திரரின் சீடன் என்ற முறையில் அவரின் கட்டளைக்கு கீழ்ப்படிந்து தாடகையைக் கொன்றார். வேதம் இட்ட கட்டளையை மீறினால் பாவம் உண்டாகும் என்பது உண்மையே என்றாலும், அந்த பாவம் ராமனைச் சேரவில்லை. ஏனென்றால் அந்த வேதமே, யாருடைய பாவம் யாரைச் சேரும் என்று விளக்கம் தருகிறது. நாட்டு மக்களின் பாவம் ஆளும் மன்னரையும், மனைவியின் பாவம் கணவனையும், சீடனின் பாவம் குருநாதரையும் சென்றடைவதாக கூறுகிறது.