கங்கையில் பிறந்ததால் முருகனுக்கு காங்கேயன் என்று பெயர். இதுபோல், விநாயகரையும் கங்கையோடு சம்பந்தப்படுத்தி த்வை மாதுரன் என்ற பெயர் சூட்டியுள்ளனர். இரண்டு தாயாரைப் பெற்றவர் என்பது இதன் பொருள். பார்வதி மட்டும் இல்லாமல், சிவனின் இன்னொரு மனைவியான கங்கையும், விநாயகரின் தாய் என்ற வகையில் இந்த பெயர் வழங்கப்படுகிறது. நியாயேந்து சேகரம் என்ற தர்க்க சாஸ்திர நுõலில் விநாயகர் ஸ்லோகத்தில் இப்பெயர் இடம் பெற்றுள்ளது. யானை இயல்பாகவே தண்ணீரைக் கண்டால் ஓடோடி வந்து விளையாடி மகிழும். துதிக்கையால் நீரை உறிஞ்சி கொப்பளித்து ஆனந்தத்தில் மிதக்கும். இதனடிப்படையில், ஆனைமுக விநாயகருக்கும் பெரிய தாயாகிய கங்கையின் பெயரும் தனக்கு இருக்க வேண்டும் என இப்படி அழைக்கப்படுகிறார்.